இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார்.
நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் 92 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது, ஜனநாயக படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
தென் மாவட்டங்களில் வெளுத்து வரும் கனமழை எதிரொலியாக வரும் 24ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை காப்பதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
விடாது பெய்து தள்ளும் பலத்த மழை காரணமாக, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறையும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு உள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களை காப்பாற்ற, கடலோர காவல்படை மூலம் 6 பேரிடர் மீட்பு குழுக்கள் களத்தில் இறங்கி இருக்கின்றன.
கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் 60 வயது கடந்த மூத்த குடிமக்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
577வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 111 பேர் பலியாகி இருக்கின்றனர். ரிக்டரில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.