கொரோனா எங்கிருந்து வந்தது…? உண்மையை கண்டுபிடித்த இங்கிலாந்து
லண்டன்: சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டதற்கான சாத்தியம் உள்ளதாக இங்கிலாந்து கண்டுபிடித்து அறிவித்து உள்ளது.
உலகையே இன்னமும் படாதபாடு படுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரசின் தோற்றம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஓடி கொண்டிருக்கின்றன. உலக நாடுகளை அழிக்க சீனாவில் இருந்து பரப்பி விடப்பட்ட உயிரி ஆயுதம் தான் இந்த கொரோனா என்று உலக நாடுகள் இன்னமும் கூக்குரல் எழுப்பி வருகின்றன.
இது சீனாவில் இருந்து தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் உலக நாடுகளினால் வெளியிடப்படவில்லை. இந் நிலையில் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானதற்கு சாத்திய கூறுகள் உள்ளது என்று இங்கிலாந்துஅறிவித்துள்ளது.
பிரிட்டன், நார்வே நாடுகளின் அறிவியல் அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சிகளில் இந்த உண்மைகள் சொல்லப்பட்டு உள்ளன. உகான் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தான் கொரோனா வைரசை சீனா உருவாக்கியதாக அந்நாடுகளின் அறிவியலாளர்கள் அறிவித்து உள்ளனர்.