இளம் நடிகை… தலைகீழாக தொங்கியபடி செய்த வேலை…! வைரல் போட்டோ
சென்னை: இளம்நடிகை ப்ரியா பவானி சங்கர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போட்டோவை போட்டு கலக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். மான்ஸ்ட்ர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் புகழ் பெற்றார். இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு போட்டோவை வெளியிட்டு அசத்தி உள்ளார். இது ஜிம்மில் எடுக்கப்பட்ட படம். அவர் வெளியிட்டுள்ள படங்களில் தலைகீழாக தொங்கும் படம் தான் மாஸாக இருக்கிறது.
படங்களை எடுத்து டுவிட்டரில் ரிலீஸ் செய்துள்ளதோடு தமக்கு தானே அவர் கமெண்டும் அடித்து உள்ளார். ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன் என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார். போட்டோக்கள் எல்லாம் தூளாக பகிரப்பட்டு வருகிறது.