Sunday, May 04 01:10 pm

Breaking News

Trending News :

no image

காலமானார் எஸ்பிபி…! திரையுலகம் அதிர்ச்சி..! ரசிகர்கள் கண்ணீர்…!


சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 74.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் பாதிப்படைந்தது.

தொடர் சிகிச்சையால் உடல்நிலை முன்னேறிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும்உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம்  தீவிர  சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது. இந் நிலையில் தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அவர் காலமானார். இதை அவரது மகன் எஸ்பிபி சரண் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எஸ்பிபியின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்பு குறித்து அறிந்த திரையுலகமும், ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

Most Popular