ஸ்டாலினுக்காக ஓபிஎஸ் பண்ணிய காரியம்…! ஆனால்… எடப்பாடி…??
சென்னை: கொரோனா தொற்றில் இருந்து முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து மக்கள் பணியை தொடர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து கூறி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதை அவர் தமது டுவிட்டரில் அறிவித்துவிட்டார். தமது இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் பற்றி ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலரும் நலன் விசாரித்து வருகின்றனர். பூரண நலம் பெற வாழ்த்தும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், ஓ பன்னீர்செல்வம் முதல்வரின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் ஓபிஎஸ் கூறி இருப்பதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன்.
@mkstalin அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பலரும் பார்த்து ஓபிஎஸ்சின் அரசியல் நாகரீகத்தை மெச்சி வருகின்றனர்.
ஆனால், மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாதது அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. அரசியல் களத்தில் மனமார்ச்சரியங்கள் சகஜம். பொதுவாழ்வில் அனைத்தும் எதிர்கொண்டாக வேண்டிய சூழலில் அரசியல் தலைமை பண்பு, அரசியல் நாகரிகம் கருதி அவர் நலன் விசாரித்திருக்க வேண்டும்.
செய்யவில்லையே? என்பது தான் இப்போது பெரிய கேள்வியாக மாற விவாதத்துக்கு ஆளாகி இருக்கிறது. இப்படிப்பட்ட தருணத்தில் ஓபிஎஸ் மக்கள் மனதில் ஸ்கோர் செய்துவிட்டதாக அனைவரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.