இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
டெல்லியில், போராட்டம் நீடித்துள்ள நிலையில் விவசாய சங்கத்தினர், அரசு இடையே இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.
சென்னையில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இன்று ஒருநாள் மெட்ரோ ரயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், திருவள்ளூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
10 பேரை பலி கொண்ட விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை ஊழியர் சுரேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நெல்லையில் புதியதாக கட்டப்பட்டு உள்ள பெரியர் பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
குரூப் 2 பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு முடிந்துவிட்ட தருணத்தில், அதன் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. 161 பணியிடங்களுக்கான மதிப்பெண்கள் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
638வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவர்த்ரா இன்று விடுதலை செய்யப்பட இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் பிராக்டர் உடல்நல கோளாறால் காலமானார். 401 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 21,936 ரன்களையும், 1417 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மும்பை மற்றும், பெங்களூரு அணிகள் மோத உள்ளன. ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடக்க இருக்கிறது.