Sunday, May 04 01:10 pm

Breaking News

Trending News :

no image

ஞானவேல் ரசிகர் மன்றம்…! புயல் கிளப்புமா லெட்டர்...?


சென்னை: ஞானவேல் ரசிகர் மன்றம் என்ற பெயரில் இணையத்தில் ஒரு லெட்டர் சக்கை போடு போடுகிறது.

பருத்தி வீரன் பிரச்னை இன்னும் இழுத்துக் கொண்டே தான் இருக்கிறேதோ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அமீருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து, கடிதங்களை அள்ளி விட்டு கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டார் ஞானவேல் ராஜா.

ஆனால் அந்த கடிதம் யாருக்கு? பெயரும் லேது? ஊரும் லேது? என்று மீண்டும் வேற ரூபத்தில் பிரச்னை எழுந்தது. நிலைமை இப்படி இருக்கவே… சமூக வலை தளங்களில் ஒரு லெட்டர் உலாவி வர ஆரம்பித்துள்ளது.

இன்றைய தேதியில் (அதாவது டிச.1) வரையப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த லெட்டரில் ஞானவேல் ரசிகர் மன்றம் என்ற பெயர் இருக்கிறது. ஞானவேல் ரசிகர் என்ற அறிவிப்புடனேயே அந்த கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது.

இது உண்மைதானா என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த கடிதத்தில் அமீரை போட்டு தாக்கும் வார்த்தைகள் பதிவாகி இருக்கின்றன. போலி கணக்கு, காசு வீணடித்தது என சகட்டு மேனிக்கு திட்டி இந்த கடிதம் தீட்டப்பட்டு உள்ளது.

கடிதத்தை பார்க்கையில் யார் இந்த ஞானவேல் ரசிகர் மன்றம்? உண்மையிலேயே இப்படி ஒரு மன்றம் இருக்கிறதா? அப்படி உள்ளது என்றால் அதன் பதிவு எண்? யார் தலைவர், பொறுப்பாளர், ரசிகர் மன்ற முகவரி? என கேள்வி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சர்ச்சையை கிளப்பி உள்ள அந்த மன்ற கடிதம் கீழே இங்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது….!  

https://twitter.com/Sri_twtzs/status/1730410019412435305 

Most Popular