அஜித்தை துரத்தியதா பிரபல நிறுவனம்…? என்ன நடந்தது?
சென்னை: நடிகர் அஜித்தின் 64வது படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளதோடு, அதனால் ரசிகர்கள் கவலையும் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற படம் துணிவு. முற்றிலும் வித்தியாசமாக நடித்து அனைத்து தரப்பினருக்கும் செம தீனி தந்த நடிகர் அஜித்தின் அடுத்த படம் என்ன என்பது தான் இப்போது பலரின் கேள்வி.
தற்போது மகிழ் திருமேனி டைரக்ஷனில் விடாமுயற்சி படத்தில் அஜித் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா, வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இடம்பெற்றுள்ளனர்.
விடாமுயற்சியை தொடர்ந்து AK 63 படத்திலும், அதன் பின்னர் AK 64 படமும் தொடங்கப்படுகிறது. இதில் லேட்டஸ்ட்டாக, வெற்றி மாறன் இயக்குவதாக இருந்த AK 64 படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. அதாவது இந்த படத்தை தயாரிக்கும் ஆர்எஸ் இன்போடைன்மென்ட் என்ற நிறுவனம் அம்முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதற்கு ஒரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது… டாப் லெவலில் உள்ள அஜித் சம்பளம், புரொடெக்ஷன் செலவு ஆகியவை எதிர்பார்த்ததை விட அதிகம் இருப்பதாகவும், லாபகரமாக இருக்குமா? என்று சந்தேகம் எழுந்ததாகவும் எனவே பட தயாரிப்பை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அஜித்தை வைத்து படம் தயாரிக்க பல நிறுவனங்கள் நான், நீ என்று முந்தி கொண்டு இருக்கும் தருணத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் படம் கைவிடப்பட்டதாக கூறப்படும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.