ராஜ்பவனை சுற்றி வளைத்த கொரோனா...! 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்
சென்னை: மருத்துவர்கள் அறிவுரைப்படி பன்வாரிலால் புரோகித் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாத உச்சத்தில் இருக்கிறது. பாதிப்பு இரண்டரை லட்சத்தை எட்டுகிறது. பலி எண்ணிக்கை 3600ஐ கடந்துவிட்டது.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தாக்கம் பரவி உள்ளது. மருத்துவர்கள், காவலர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என எல்லோரையும் பாதித்து வருகிறது.
அதே நேரத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்கள், பாதுகாவலர்கள் என பலருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இப்போது ஆளுநர் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தம்மை தானே 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.