Sunday, May 04 12:08 pm

Breaking News

Trending News :

no image

எங்க சின்னம் இதுதான்…! ரொம்ப பொருத்தம்


லோக்சபா தேர்தல் 2024ல் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ளார்.

இப்ப வரைக்கும் மக்களின் சந்தேக வளையத்துக்குள் இருக்கும் கட்சி நாம் தமிழர். பாஜகவின் B team என்ற அடையாளம் உண்டு. அதற்கு திருச்சி சூர்யா சிவா வெளியிட்ட தொலைபேசி உரையாடல், சாட்டை துரைமுருகனின் பேச்சு என பல உதாரணங்களை எதிர்க்கட்சி பிரமுகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

பாஜகவிடம் முறைப்பு காட்டியதால் நாதக சின்னம் விவசாயி பறிபோனதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. இது இரு கட்சிகளின் கூட்டு நாடகம் என்றும் சில தரப்பினர் பேசி வருகின்றனர்.

நிலைமை இப்படி இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன என்பது இப்போது தெரிந்துவிட்டது. அது மைக் சின்னம்… நாம் தமிழர் தம்பிகளின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் ஒலிவாங்கி.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் சீமான். அவர் மேலும் கூறியதாவது;

விவசாயி சின்னத்தை பெற போராடினோம், அது கிடைக்கல. மைக் சின்னம் ஒதுக்கீடு ஆகி உள்ளது. எங்களின் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மைக் சின்னம் பொருத்தமானது என எண்ணுகிறோம் என்று கூறி உள்ளார்.

Most Popular