Sunday, May 04 11:49 am

Breaking News

Trending News :

no image

2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் எஸ்கேப் ஆக முடியாதாம்…! இந்த வைரஸ் அட்டாக் கன்பார்மாம்…!


கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் டெல்டா வைரஸ் வீரியத்துடன் தாக்குமாம் என்று புது குண்டை தூக்கி போட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

கொரோனா என்னும் கொடிய தொற்றின் பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னமும் விடுதலை பெறவில்லை. இப்போதைக்கு இதை தடுக்க தடுப்பூசி என்னும் பேராயுதம் மட்டுமே மனித குலத்துக்கு உள்ளது. கொரோனா ஒழிப்புக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந் நிலையில் தான் விஞ்ஞானிகள் தெரிவித்த புது தகவல் அனைவரையும் அதிர்ச்சியின் உச்சிக்கு கொண்டு போய் விட்டு இருக்கிறது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ். இதனை டெல்டா வைரஸ் என்று அழைத்து வருகின்றனர்.

இந்த டெல்டா வைரசானது தொற்று பரவலை அதாவது அதன் வேகத்தை அதிகப்படுத்துமாம். தடுப்பூசி போட்டவர்களையும் விட்டு வைக்காதாம். அவர்களை பாதிக்கும் ஆனால் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அடுத்தவர்களுக்கு எளிதில் தொற்றிவிடுமாம்.

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் விடாதாம். மரணத்தை மட்டுமே சம்பவிக்காது, ஆனால் அவர்கள் மூலமாக மற்றவர்களை போட்டு தாக்கிவிடுமாம். ஆகையால், வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டது, இனி இருக்காது என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று அலர்ட் ஆகின்றனர் விஞ்ஞானிகள். ஆக… கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்காத வரை டேன்ஜர் தான் எண்ண தோன்றுகிறது.

Most Popular