கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தக் கசிவு…! மத்திய அரசு ‘ஷாக்’ தகவல்
டெல்லி: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தக்கசிவு இருப்பதாக ஆய்வுக் குழு தெரிவித்து உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தக்கசிவு, ரத்தக்கட்டு ஏற்பட்டதாக எச்சரிக்கைகள் எழுந்ததா இந்தியாவிலும் ஒரு வாரமாக ஆய்வு நடத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்திய பின் கிட்டத்தட்ட 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் கோவின் தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. அவற்றில் 700 சம்பவங்கள் மிகவும் தீவிர பாதிப்பு உள்ளதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 26 சம்பவங்களில் ரத்தக்கசிவு, ரத்தக்கட்டு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்திருக்கிறது.
முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 20 நாட்கள் கழித்து எங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டார்களோ அங்கேயே தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.