12 விநாடி வீடியோ…! நடிகர் விஜயின் செம சம்பவம்
வெறும் 12 விநாடி தான் என்றாலும் நடிகர் விஜய் செய்த தரமான சம்பவம் அவரது ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களை மட்டுமல்லாது தென் தமிழகத்தையும் புரட்டி எடுத்தது கனமழை. வரலாறு காணாத சேதம், இழப்பு என மக்கள் கண்ணீர் கடலில் தத்தளித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும், தன்னார்வ அமைப்புகளும் உதவி செய்து வருகின்றன. பிரபலங்கள் வரிசையில் நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தமது விஜய் இயக்கம் சார்பில் அவரே நேரடியாக சென்று உதவிகளை வழங்கி இருக்கிறார். நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட இருந்த நிகழ்ச்சியில் நீண்ட நேரம் நின்று கொண்டே மக்களுக்கு உதவிகளை வழங்கி அசத்தினார்.
அப்போது, அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து காத்திருந்தனர். என்றுமே ரசிகர்கள் என்றால் ஒரு வண்டி டானிக் குடித்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர்கள் போல் விஜயும் மாறினார்.
தம்மை சுற்றி திரண்டு நின்றிருந்த ரசிகர்களுடன அவர் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார். வெறும் 12 விநாடி தான் வீடியோவின் நேரம் என்றாலும் ரசிகர்கள் அதை விடுவதாக இல்லை… இணையத்தில் வைரலாக்கி தாம் தூம் என்று கொண்டாட்டங்களில் அசத்தி வருகின்றனர்.
அந்த 12 விநாடி செல்பி வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.