Sunday, May 04 12:29 pm

Breaking News

Trending News :

no image

நாளை மறுபடியும் கலெக்டர்களுடன் மீட்டிங்…! தயாராகும் தலைமை செயலாளர்


சென்னை: அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தலைமைச்செயலாளர் சண்முகம் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலாளர் சண்முகம் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, நாளை பிற்பகல் 3 மணிக்கு, தலைமைச்செயலகத்தில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார்.

கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கான காப்பீடு, ஊரக வீட்டுவசதி,  பழங்குடியினருக்கான வீட்டுவசதி, ஆன்லைன் பட்டா பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Most Popular