எப்பா.. என்னா ஆட்டம்…! தூக்கியடித்த ஜனாதிபதி..! புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி டிஸ்மிஸ்
டெல்லி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அப்பதவியில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்.
புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநரான கிரண் பேடிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. அண்மையில் டெல்லிக்கு சென்ற அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனு ஒன்றை கூட அளித்திருந்தார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக அவர் வகித்து வந்த துணைநிலை ஆளுநர் பொறுப்பு, தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திர ராஜனுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.