#TNPSC குரூப் 4 ரிசல்ட்டுகளை தெரிஞ்சுக்க ஈசி வழி..!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள தருணத்தில் எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு ஜூலை 24ம் தேதி 10117 இடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வை 18 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
தேர்வு முடிந்து பல மாதங்கள் கடந்தும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் நேற்று இந்த முடிவுகள் வெளியாகின.
தேர்வு முடிவுகளை அறிந்து பலரும் அதை பார்த்து வருகின்றனர். தேர்வாளர்கள் இந்த முடிவுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். tnpscexams.in என்ற தளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் போதும். எளிதாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.