Sunday, May 04 11:55 am

Breaking News

Trending News :

no image

கமலுக்கு நடக்க போகும் ‘சம்பவம்’…? உதயநிதிக்கும் ‘வெயிட்டிங்’


சென்னை: அரசியல்வாதிகளை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் ரெய்டு இலக்குக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் லேட்டஸ்டாக, கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது வருமானவரித்துறை குறி வைத்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

கோலிவுட்டுக்கு இன்று போதாத காலம் என்றே சொல்லலாம். சினிமா புரொட்யூசர்கள், பைனான்சியர்களை குறி வைத்து வருமானவரித்துறை ரெய்டை துவக்கி வைத்திருக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை அன்புசெழியனின் சென்னை வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் ரெய்டு விட்டுள்ளனர்.

சைதையில் உள்ள தியேட்டர், மதுரையில் கோபுரம் சினிமாஸ் ஆகியவற்றையும் ஐடி விட்டுவைக்கவில்லை. இவர் மட்டுமல்லாது மற்றொரு சினிமா தயாரிப்பாளரான டிஜி தியாகராஜன், நடிகர் சூர்யாவின் நெருக்கமான உறவினர்கள் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவன அலுவலகம், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா வீடு, தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, கலைப்புலி தாணு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் ரெய்டு நடந்துள்ளது.

இந்த அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், தஸ்தாவேஜூக்கள் சிக்கியிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் செய்திகள் கசியவிடப்பட்டு உள்ளன. ஆனால் ரெய்டின் போது ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த ரெய்டு அடுத்த கட்டமாக நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வருமானவரித்துறை டார்கெட் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கமல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டுக்கு அதிகாரிகள் தயாராக இருப்பதாக ஒரு தகவல் உலாவி கொண்டு இருக்கிறது. இந்த சோதனையில் உதயநிதி ஸ்டாலினையும் வருமான வரித்துறை விடுவதாக இல்லை என்று ஒரு செய்தி கோலிவுட் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் மேலும் பல அதிரடியான விஷயங்கள் அரங்கேறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Most Popular