Sunday, May 04 01:04 pm

Breaking News

Trending News :

no image

அமைச்சருக்கு HEART ATTACK….? பதறிய திமுக


தமிழகத்தின் முக்கிய அமைச்சராக இருப்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அமைச்சரவையில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சர்களில் ஒருவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக உள்ளார். லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

கடுமையான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியநிலையில் உடனடியாக சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அங்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வேறு ஒரு அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய இருப்பதாகவும் அக்குழு கூறி உள்ளது. அமைச்சரின் உடல்நிலை பற்றிய விவரங்கள் அனைதது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Most Popular