Sunday, May 04 12:17 pm

Breaking News

Trending News :

no image

ரெண்டா..? நோ..நோ..! ஒன்லி ஒன்..! ஓபிஎஸ் கிழி… கிழி…!


சென்னை: இனி அதிமுகவில் ஒரே தரப்பு தான் உள்ளது, இரண்டு தரப்பு இல்லை என்று அதிரடி காட்டி இருக்கிறார் ஓபிஎஸ்.

அதிமுக மட்டுமல்ல… மற்ற அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் எதிர்பார்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அறிவித்து இருக்கிறது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ், அதிமுகவின் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இடைக்கால பொது செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய கூட்டம் செல்லாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூடும் 10 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என முக்கிய அம்சங்களை தீர்ப்பாக வழங்கி இருக்கிறது.

கோர்ட் தீர்ப்பு ஈபிஎஸ் மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுக்கு இடியாய் இறங்க ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று இருக்கிறது. பட்டாசுகள், இனிப்புகள் என சர்வமும் கொண்டாட்டமே என்று கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன். இருவரும் தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தந்திருக்கின்றனர். அதிமுகவில் நிலவிய அசாதாரணமான சூழல்களுக்கு இடையே நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்து இருக்கிறது.

இது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். எங்கள் தரப்புக்கு கிடைத்த முழு வெற்றி. அதிமுக கொள்கை, கோட்பாடுகளை ஏற்பவர்களை கட்சியில் சேர்த்து கொள்வோம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்துவேன். இனி… ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என்பது கிடையாது. ஒரே தரப்புதான். தொண்டர்கள் விருப்பம் போல இனி அனைத்தும் நடக்கும் என்று கூறினார்.

Most Popular