Sunday, May 04 11:58 am

Breaking News

Trending News :

no image

அடுத்த ஷாக்…! பட்டிமன்ற பிரபலம் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அட்மிட்…!


சென்னை: பட்டிமன்ற பிரபலம் பாரதி பாஸ்கர் திடீரென உடல்நிலை மோசமானதால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சாலமன் பாப்பையாவை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவரது பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் தவறாது இடம்பெறுபவர் பாரதி பாஸ்கர். அவரும் பட்டிமன்ற பேச்சாளரான ராஜாவுக்கும் இடையேயான கவுண்ட்டர் அட்டாக் அவ்வளவு பிரபலம்.

தமது வசீகர புன்னகை, பேச்சு ஆகியவற்றால் உலக தமிழர் மத்தியில் ஏக பிரபலம். கெமிக்கல் இன்ஜியரிங் பட்டதாரி. எம்பிஏ முடித்த அவர் உலகின் முன்னணி தனியார் வங்கியில் உயரிய பொறுப்பில் தற்போது உள்ளார். வங்கி பணிகள் ஒரு பக்கமும், சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற பேச்சு என மறுபுறமும் பரபரப்பாக இருப்பவர்.

2 வாரங்களுக்கு முன்பு தான் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகிய மூவரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந் நிலையில், பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு உள்ளது. அவரின் மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

உடனடியாக அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையான அப்பல்லோவில் சேர்க்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை பிரபல நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு தமது டுவிட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

அழகான தமிழ், புன்னகை ஆகியவற்றால் அறியப்பபடும் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. விரைவில் அவர் குணம் அடைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுங்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Most Popular