Sunday, May 04 11:59 am

Breaking News

Trending News :

no image

முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் முக்கிய கோரிக்கை….!


சென்னை: முன் களப்பணியாளர்கள் பட்டியலில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் நம்பிராஜன், தினகரன் செய்தியாளர் டென்சன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் அ.ஜெ. சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் டி.இளையராஜா ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதன் விபரம் வருமாறு: செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்" என அறிவித்து எங்கள் மத்தியில் மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினீர்கள். அறிவிப்பு வெளியான சில தினங்களில்: இன்று இரண்டு பத்திரிகையாளர்கள் மரணம் அடைந்து உள்ளனர்.

மதுரை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நீண்ட கால தலைவராக இருந்த மூத்த பத்திரிகையாளர் நம்பிராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதி தினகரன் செய்தியாளர் டென்சன் (கொரோனா தொற்று) உயிரிழந்தனர்.

இருவரின் குடும்பமும் மிகவும் வறுமையின் காரணமாக சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். ஆகையால் முதல்வர் அறிவிப்பு செய்த "முன் களப்பணியாளர்கள்" பட்டியலில் இவர்கள் இருவரின் பெயரையும் சேர்த்து இவர்களுக்கு கிடைக்க கூடிய சலுகைகள் அனைத்தும் இவர்களின் குடும்பத்தினருக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த கோரிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

அவர்களின் இருவரின் மறைவும், மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கும் வகையில் உள்ளது. அவர்கள் இருவரின் ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம், ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

Most Popular