Sunday, May 04 11:54 am

Breaking News

Trending News :

no image

விசிக துண்டுடன் ஓடி வந்த பெண்….! அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன செய்தார் தெரியுமா..?


திருச்சி: திருச்சி அருகே விசிக துண்டை அணிவிக்க வந்த பெண்ணுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த செயல் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. பல மாவட்டங்களில் அரசின் சிறப்பு திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் புதியதாக கட்டப்பட்ட சிமெண்ட் சாலையை திறந்து வைக்க அங்கே சென்றிருக்கிறார்.

வழக்கம்போல், கட்சி தொண்டர்கள், மக்கள் உள்ளிட்ட பலரும் அவரை உற்சாகமாக திரண்டு வரவேற்றனர். அந்த தருணத்தில் நடந்த சம்பவம் ஒன்று தான் இப்போது பலரிடமும் பேசப்பட்டு வருகிறது.

விசிக பெண் ஒருவர்…  கையில் விசிக துண்டுடன் அந்த இடத்துக்கு வேக, வேகமாக வந்துள்ளார். அன்பில் மகேசுக்கு அந்த விசிக துண்டை அணிவிக்க விரும்பினார். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள் பெண்ணை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

ஆனால், அதை கவனித்த அன்பில் மகேஷ் தொண்டர்களை அதே இடத்தில் வன்மையாக கண்டித்து துண்டை போடுமாறு விசிக பெண்ணிடம் கூறி இருக்கிறார். அவரும் துண்டை அணிவிக்க மகிழ்ச்சியுடன் அன்பில் மகேஷ் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி உள்ளன. அதோடு அன்பில் மகேசுக்கு பாராட்டுகளும், கட்சி தொண்டர்களுக்கு வசவும் விழுந்து வருகிறது.

Most Popular