சோறுதான் முக்கியம்..! பாஜக எம்எல்ஏ தெறி…!
சென்னை: சோறுதான் முக்கியம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் பேசி உள்ளார்.
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் திமுக, அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பேசினர். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் உரையாற்றினார். அவர் பேசியதாவது::
மனிதனுக்கு சோறா? கரண்டா? என்று என்னை கேட்டால் சோறுதான் முக்கியம் என்பேன். இது அனைவரும் உணர்ந்த விஷயம். அதிமுக ஆட்சியில் இருந்த போது டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவித்தது.
நிலக்கரி சுரங்க விஷயத்தில் 3 டெல்டா பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஏலத்தை மாற்றியாக வேண்டும். மத்திய அரசு இதில் விலக்கு கொடுக்க வேண்டும், இது குறித்து தமிழக பாஜக மத்திய நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது என்று பேசினார்.