இந்தாங்க… திமுக அடிச்ச இன்னொரு சிக்சர்…! அமைச்சர் சேகர்பாபு சூப்பர்…!
சென்னை: அனைத்து கோயில்களிலும் பெண்களும் அர்ச்சகராக விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருக்கிறார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சேகர் பாபு தலைமை தாங்கினார். அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்துவது, கோயில்களில் தமிழில் அர்ச்சனை உள்ளிட்வை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அதற்காக பயிற்சி அளிக்கப்படும்.
தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று முக்கிய கோயில்களில் அறிவிப்பு பலகை வைக்கப்படும். அந்த பலகையில் அர்ச்சகர் பெயர், மொபைல் எண் ஆகியவை குறிக்கப்பட்டு இருக்கும்.
100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இருப்பர். பெண்கள் விருப்பப்பட்டால் அவர்களும் அர்ச்சகர்களாக பயிற்சி அளிக்கப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரத்திருந்தால் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.