மருமகளை துரத்த… மாமியாருக்கு உதவிய கொரோனா….!
ஐதராபாத்: தெலுங்கானாவில் மருமகளை துரத்தியடிக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமியார் கட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானாவில் உள்ளது நெமிலிகுட்டா என்ற ஊர். இங்குள்ள பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன புதிதில் இருந்து வழக்கமான அனைத்து குடும்பங்களுக்கும் நடப்பது போன்று மாமியார், மருமகள் பிரச்னை வந்தது.
3 ஆண்டுகள் கடந்தும் இந்த பிரச்னை ஓயவே இல்லை. சதா சர்வ காலமும் இருவரும் மல்லுக்கட்டி கொண்டனர். எப்படியாவது மருமகளை வீட்டை விட்டு விரட்டி விட வேண்டும் தினுசு, தினுசாக திட்டங்களை தீட்டினார் மாமியார். ஆனால் எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை.
இந் நிலையில் கொரோனா வந்துள்ள மாமியார் வீட்டு தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது தனிமனித இடைவெளியை மருமகள் கடைபிடிக்க.. ஒரு கட்டத்தில் தீவிரமாக யோசித்த மாமியார், மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பி இருக்கிறார்.
பேரக்குழந்தையையும் கட்டிப்பிடிக்க… இருவருக்கும் சில நாட்கள் கழித்து கொரோனா உறுதியாகி இருக்கிறது. அவ்வளவு தான்…இதையே காரணம் காட்டி மருமகளை வீட்டை விட்டு அடித்து துரத்தி உள்ளார். மாமியாரின் இந்த திட்டத்தால் வேதனை அடைந்த மருமகள் இப்போது தமது சகோதரர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்த விஷயம் ஊருக்குள் பரவ.. மாமியாரை கரித்துக் கொட்ட ஆரம்பித்து இருக்கின்றனர் ஊர் மக்கள். இது குறித்து அதிகாரிகளும் ஒரு பக்கம் விசாரணையை ஆரம்பித்து உள்ளனர்.