தலைகுனிந்து… கண்ணீர் விட்டு ‘அழுத’ துர்கா ஸ்டாலின்…! பரபரத்த ஆளுநர் மாளிகை…!
சென்னை: ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வை நேரில் கண்ட அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட 25 ஆண்களுக்கு பிறகு திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று ஸ்டாலின் மைக்கில் சொன்னபோது…விஐபி பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டு அழுதார். தலைகுனிந்து, கண்களில் வழிந்து கண்ணீரை தமது கண்களால் துடைக்க.. அதை பார்த்த அனைவரும் ஒரு கணம் நெகிழ்ச்சியில் உறைந்து போயினர்.
அருகில் இருந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த காட்சியை கண்டு நெகிழ்ந்தனர். தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை கண்டு ரசித்த லட்சக்கணக்கானோரும் துர்கா ஸ்டாலின் கண்ணீர் சிந்தியதை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.