ரோகித் ஜாதகம் சாதகமா…? வல்லுநரின் ‘ஷாக்’ கணிப்பு
டெல்லி; ரோகித் சர்மாவின் ஜாதகம் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தருமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் ஆவலை ஏற்படுத்தி உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனல் இன்று நடக்கிறது. தொடரில் வீழ்த்தவே முடியாத, பலம் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாக மோதுகின்றன.
பைனல் போட்டியை காண துடிக்கும் ரசிகர்கள் மத்தியில் இந்திய அணியின் ஜாதகம் எப்படி இருக்கிறது என்ற எதிர்பார்ப்புக்கும் எழுந்துள்ளது. அதற்கேற்ப அணியின் ஜாதகத்தை பல நிபுணர்கள் கணித்து இருந்தாலும், பண்டிட் ஜகந்நாத் குருஜியின் கணிப்பு தான் இப்போது பிரபலமாக உள்ளது.
இது குறித்து அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது; இரு அணி ஜாதகத்தை ஒப்பிட்டால் அதில் இந்திய அணி முன்னணியில் இருக்கிறது. பலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது.
இதன் மூலம் உலக கோப்பை இம்முறை இந்தியாவுக்கு தான் என்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் போட்டி நாளில் இந்திய வீரர்கள் எதிரணியை குறைத்து மதிப்பிடாமல் சமயோசிதமாக எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று கூறி உள்ளார்.
அணியின் ஜாதகத்தை மட்டுமல்லாது, ரோகித் சர்மாவின் ஜாதகத்தையும் அவர் ஆராய்ந்து சில குறிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோகித் சர்மாவின் சுய ஜாதகம் இந்திய அணிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது. ஜாதகத்தின் கிரக நிலைகள், அதன் பார்வை என அனைத்து சிறப்பு அம்சங்களும் 2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்ற அம்சங்களுடன் ஒத்து போகிறது.
எனவே தோனியை போல, ரோகித்தும் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தர போகிறார். இந்த இறுதி போட்டி, உலக கிரிக்கெட் தொடரின் அத்தியாயத்தில் புதிய வரலாறு படைக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.