ஓபிஎஸ்சிடம் இருந்து ‘அதை’யும் பிடுங்கிய ஈபிஎஸ்…!
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை பறித்து, ஆர்பி உதயகுமாருக்கு ஈபிஎஸ் அளித்துள்ளார்.
ஏகப்பட்ட மோதல்கள், கலாட்டாக்களுக்கு மத்தியில் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகி இருக்கிறார். பொதுக்குழுவுக்கு பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் வெகுண்டெழ ஆளாளுக்கு பதவிகளில் இருந்து நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தனர்.
இதில் கட்டமாக ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறித்து ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 17ம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோலஎ எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் என எல்லா பதவிகளும் காலியான நிலையில் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் ஈபிஎஸ் பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.