நாடே அழுவுதய்யா… நிஜமானது ரமணா பட வசனம் #CaptainVijaykant
தமிழ்நாடே அழுகுரலில் இருக்கும் அளவுக்கு விஜயகாந்த் மறைவை ஜீரணிக்க முடியாமல் அனைத்து தரப்பினரும் கதறி வருகின்றனர்.
நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் மறைந்துவிட்டார்.. எதிர்பார்க்காத செய்தி இன்று காலை 7 மணி அளவில் சென்னை மட்டும் அல்லாது உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது.
நம்ப முடியவில்லை என்று பலரும் சொன்னாலும்.. நம்பித்தான் ஆக வேண்டும் என்ற வகையில் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.
திரையுலகினர், தொண்டர்கள், அவரால் வாழ்வு பெற்றவர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் படங்கள், பாடல்கள், அவரின் மேனரிசம் பற்றி வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
அதில் அனைத்து தரப்பினரையும் உலுக்கிய வீடியோ ஒன்று இங்கே கீழே தரப்பட்டு உள்ளது. ரமணா படத்தில் விஜயகாந்தை சிறையில் வைத்திருக்கும் போது முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ரவிச்சந்திரன், நாடே அழுவுதய்யா, என்று கூறும் வசனம்…!
விஜயகாந்தின் நினைவை போற்றும் வகையில் அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது…!