Sunday, May 04 12:00 pm

Breaking News

Trending News :

no image

குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் 'திடீர்' மாற்றம்…! முன்னாள் அமைச்சர் போட்டி


சென்னை: குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளார்.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போன்று பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜான்தங்கம் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஜான்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Most Popular