Sunday, May 04 12:44 pm

Breaking News

Trending News :

no image

மகனுக்காக தொகுதியை வாங்கிய எம்ஜிஆர் செல்லப்பிள்ளை…!


சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

 காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசலும், வாரிசு அரசியலுக்கும் பஞ்சமில்லை என்பது ஊரறிந்த ரகசியம். எந்த பிரச்னை என்றாலும் டெல்லிக்கு பிளைட் பிடிக்கும் காங்கிரஸ் தலைவர்களில் பலர் இம்முறை தமது வாரிசுகளுக்கு தமிழக சட்டசபை தேர்தலில் சீட் கேட்டு மல்லுக்கட்டினர்.

இந் நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்றிரவு காங்கிரசில் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிலும் வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையான திருநாவுக்கரசர் தமது மகன் எஸ் டி ராமச்சந்திரனுக்காக அறந்தாங்கி தொகுதியை பெற்றுள்ளார்.

இதேபோன்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா இந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறார்.

Most Popular