Sunday, May 04 12:25 pm

Breaking News

Trending News :

no image

மானம் போகுது…! சொதப்பிய பாஜக…!


வேட்பாளரை கரெக்டாக அறிவிச்ச பாஜக, தொகுதி பெயரை மாத்தி வெளியிட்டு கிச்சு கிச்சு மூட்டி இருக்கிறது.

லோக்சபா 2024 தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யார்? என்ற முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய பாஜக தலைமை அறிவித்துள்ளது. மொத்தம் 9 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தென்சென்னையில் தமிழிசை சௌந்தர ராஜன், மத்திய சென்னையில் வினோஜ் செல்வம் உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

கூட்டணி கட்சியை சேர்ந்த ஏ.சி.சண்முகத்துககு வேலூரும், பாரிவேந்தருக்கு பெரம்பலூரும் ஒதுக்கப்பட்டது. மற்ற 7 பேரும் பாஜக வேட்பாளர்கள். இதில் தான் ஒரு கூத்து அரங்கேறி இருக்கிறது.

அதுதான் வேட்பாளர் பெயரை சரியாக அறிவித்து, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை தமக்கான தொகுதி என்று பாஜக அறிவித்து சிரிப்பை வரவழைத்து இருக்கிறது.

இந்த பட்டியலில் தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். டெல்லி செல்லும் முன்பு இது குறித்து பேட்டியும் அளித்து இருந்தார்.

தொகுதி மாறிய தமாஷை பின்னர் அறிந்த கட்சி தலைமை, அதை சரி செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் தூத்துக்குடிக்கு பதில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவித்து உள்ளது.

ஒரு வேட்பாளருக்கு உரிய தொகுதியையே சரியாக கூற முடியல… எப்படி பிரச்சாரத்தில் கலக்குவது? என்று சிரிப்பதா,அழுவதா என்ற நிலையில் உள்ளனர் பாஜக தொண்டர்கள். இந்த கோமாளித்தனத்தை கண்ட நெட்டிசன்ஸ் இன்னிக்கு ஒருத்தன் சிக்கிட்டான்டா என்று இணையம் முழுவதும் பாஜகவை கொத்து பரோட்டவாக்கி பொளந்து வருகின்றனர். 

Most Popular