நம்பமுடியலை…? பவர் ஸ்டாருக்கு ஜோடியான த்ரிஷா…!
சென்னை: பிரபல நடிகை த்ரிஷா பவர் ஸ்டாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பவர் ஸ்டார் என்றால் தமிழகத்தில் சினிமா உலகம் ஒருவரை தான் கை காட்டும். அவர் தான் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் கன்னட திரையுலகிலும், தேசிய திரையுலகிலும் பவர் ஸ்டார் என்றால் அது புனித் ராஜ்குமார் தான்.
புனித் ராஜ்குமாருக்கு என்று கன்னட திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரை தெய்வமாக வணங்குபவர்களும் உண்டு. அவர் இப்போது பவன்குமார் இயக்கத்தில் த்வித்வா படத்தில் நடிக்கிறார். இந்த படம் த்ரில்லர் படமாகும். அதில் புனித்துக்கு ஜோடி த்ரிஷா.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பை கண்டு த்ரிஷா, பவர்ஸ்டாருடன் கை கோர்த்து நடிப்பது மகிழ்ச்சி என்று டுவிட்டரில் கூறி உள்ளார்.
முன்னதாக த்வித்வா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 1ம் தேதி ரிலீசானது. படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.