இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி சயனிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாட்டு பணிகள் குறித்து டெல்லியில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
அதிமுக சின்னம், கொடி விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக அரசின் புதிய அட்வகேட் ஜெனரலாக பிஎஸ் ராமன் இன்று பதவியேற்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக 24 ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
பி. பள்ளப்பட்டியில் தேவாலயத்துக்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட தாம்ரம்-நெல்லை ரயிலில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
600வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஸ்பெயின் நாட்டில் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்திய ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது.