Sunday, May 04 12:20 pm

Breaking News

Trending News :

no image

ரேஷன் கார்டு இருந்தா அது ‘ப்ரீ’…! சர்ப்ரைஸ் கொடுத்த எடப்பாடி…!


விழுப்புரம்: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் விலையில்லாகேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

வேளாண் விலை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக அதிகரிக்கப்படும் என்று பேசினார். பின்னர் மயிலம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நான் விவசாயியாக பிறந்ததை பிறவி பயனாக கருதுகிறேன். நான் விவசாயி என்றால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களில் 6 பேர் தான் எம்பிபிஎஸ் பயின்றனர். ஆனால் இப்போது 7.5 சதவிகித இட ஒதுக்கீடு காரணமாக 313 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கின்றனர் என்று கூறினார்.

Most Popular