ரஜினி மகள் வீட்டில் இப்படியா நடக்கணும்…? போலீசுக்கு வந்த புகார்…!
சென்னை: நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் விலை உயர்ந்த, நகைகள் திருடு போய்விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் தேனாம்பேட்டை செயிண்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா குடியிருந்து வருகிறார். அவரது வீட்டின் லாக்கரில் இருந்த விலை உயர்ந்த தங்க, வைர நகைகள் மாயமானதாக தெரிகிறது.
இது குறித்து ஜஸ்வர்யா தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அதில் அவர் கூறி உள்ளார். லாக்கரில் நகை இருப்பது 3 பணியாளர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
2019ம் ஆண்டு தமது சகோதரி சவுந்தர்யா கல்யாணத்தின் போது இந்த நகைகளை பயன்படுத்தி பின்னர் லாக்கரில் வைத்து இருந்ததாக புகாரில் தெரிவித்து இருக்கிறார். அவரது புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.