அரசு ஊழியரா..? உங்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடையாது..!
ராய்ப்பூர்: அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடையாது என்று சத்திஸ்கர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை தினமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எப்படியாவது கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு மத்திய, மாநில அரசு முயற்சித்து வருகின்றன. ஆனாலும் நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கரேலா பெந்தரா மார்வாகி என்ற மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழுள்ள ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பழங்குடி நலத்துறை உதவி ஆணையர் ஆணையிட்டு உள்ளார்.
பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், அதற்கான சர்டிபிகேட்டை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி காட்டினால் தான் மாத சம்பளம், தடுப்பூசி போட்டதற்கான சர்டிபிகேட்டை காட்டாவிட்டால் சம்பளம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.