Sunday, May 04 12:07 pm

Breaking News

Trending News :

no image

‘சப்பு’ன்னு அடிச்சிருவேன் பார்த்துக்கோ…! அமைச்சர் அடாவடி பேச்சு…! கொந்தளிக்கும் செய்தியாளர்கள்


ஸ்ரீவில்லிபுத்தூர்: அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன்என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டு உள்ளார். தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் தற்போது தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

இந் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மான்ராஜை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று பிரசாரம் செய்தார். தேரடி தெரு அருகே அதிமுக தேர்தல் அலுவலகத்தை  அவர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை செய்தியாளர்களை சந்திக்க முயன்றனர். அப்போது அமைச்சர், ‘நான் பேட்டி தர மாட்டேன். அமமுகவை பற்றி கேள்வி கேட்கிறதா இருந்தா இப்போவே கிளம்பியிருங்க.

சப்புன்னு அடிச்சிருவேன் பார்த்துக்கோ. சும்மா தேவையில்லாத பிரச்சனைய கிளப்பிகிட்டு என்று மரியாதையில்லாமல் கூறினார். அமைச்சரின் இந்த அடாவடி பேச்சால் செய்தியாளர்கள் மட்டுமின்றி, அதிமுக நிர்வாகிகளும் அதிர்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர்.

Most Popular