எவ்வளவோ முயன்றும்… காலமானார் டிராபிக் ராமசாமி…!
சென்னை: சமூக ஆர்வலரும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி வந்தவருமான டிராபிக் ராமசாமி இன்று மாலை காலமானார்.
அண்மைக்காலமாக வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். ஐசியுவில் மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
உடல்நிலை ரொம்பவும் மோசம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி டிராபிக் ராமசாமி இன்று மாலை காலமானார். பல ஆண்டுகளாக மக்களின் பிரச்சனைகளுக்கு சட்டத்தின் வழியாக தீர்வு காண்பதற்காக போராடியவர்.
ஒரு காலத்தில் சென்னை பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருக்கு உறுதுணையாக இருந்தார். அதன் காரணமாக பின்னாளில் டிராபிக் ராமசாமி என்று பரவலாக அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்கு சமூக நல ஆர்வலர்கள், பல்வேறு சமூக நல இயக்கங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.