#RahulGandhi வீடு போச்சு…! ‘செக்’ வைத்த மத்திய அமைச்சகம்
டெல்லி: எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட வீட்டையும் காலி செய்யுமாறு கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி செய்த பிரச்சாரம் இன்று அவரின் எம்பி பதவியை காலி செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால் என்று நாட்டில் உள்ள ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும் கொந்தளித்து உள்ளன.
2 ஆண்டுகள் சிறை, எம்பி பதவி காலி, தேர்தலில் போட்டியிட முடியாது என தொடர் நெருக்கடிகளுக்கு ஆளாகி உள்ள ராகுலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகி உள்ளது.
இந் நிலையில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது, எம்பியாக இருந்த போது அவருக்கு டெல்லியில் எண் 12, துக்ளன் லேனில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ராகுல் வசித்து வரும் நிலையில் எம்பி பதவி பறிக்கப்பட்டதால் 1 மாதத்தில் இந்த பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.