தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது முழு ஊரடங்கு…! இதோ முழு விவரம்…!
சென்னை: தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் எங்கோ சென்றுவிட்டது. தினசரி பாதிப்பு கட்டுக்கடங்காமல் இருப்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.
நேற்றைய தினம் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் பின்னர் மாவட்ட ஆட்சியர்கள், மூத்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந் நிலையில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும், நாளையும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் முழு ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.