இப்படி ஆயிடுச்சே…? ரஜினி வீட்டின் நிலைமை….! VIRAL VIDEO
சென்னை: சென்னையை உலுக்கி எடுத்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டையும் விட்டு வைக்க வில்லை.
இன்னமும் எத்தனை நாள் மக்கள் மழைநீர், வெள்ளத்தில் வசிக்கக்கூடும் என்பது தெரியவில்லை. பேருந்தும், வாகனங்களும் செல்ல வேண்டிய சாலைகளில் இப்பவும் படகுகள் சவாரி செய்கின்றன.
சென்னை நகரின் முக்கிய பகுதிகள் வழக்கமான பரபரப்புடன் இயங்கினாலும், புறநகர் பகுதிகளில் இன்னமும் நிலைமை சீராகவில்லை. உணவு, தண்ணீர், பால் என அத்யாவசிய தேவைகளுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
சாதாரண மக்கள் என்றில்லை… பெரிய மனிதர்களையும் மழை, வெள்ளம் விடவில்லை. அவர்களையும் வீடுகளை விட்டு வெளியேறவிடாமல் செய்துவிட்டது.
அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு நிலைமையும் என்று ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது. போயஸ் கார்டன் பகுதியில் வெள்ள நீர் வடியவில்லை. ரஜினி வீட்டை சூழ்ந்த வெள்ளம் என்று அந்த வீடியோ படு வைரலாக சுற்றுகிறது.
வீட்டின் பாதுகாவலர் ஒருவரிடம் மற்றொருவர் நலன் விசாரிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.