ஊரையே சிரிக்க வைச்சவர்..! இன்னிக்கு அவர் குடும்பம் படும் கஷ்டம்…!
சென்னை: ஊரையே சிரிக்க வைத்து மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிய நகைச்சுவை நாயகர்களையும், திறமை சாலிகளையும் அடையாளப்படுத்தியது. அந்த வரிசையில் வந்தவர் வடிவேல் பாலாஜி.
2020ம் ஆண்டு அவர் மறைந்து போக, திரையுலகத்தை சேர்ந்த பலரும் அதிர்ந்து போயினர். அவரின் மறைவு சின்னத்திரையில் உள்ளோர் கலங்கினர். சின்னத்திரையில் வலம் வந்த தருணத்தில் கூட வடிவேல் பாலாஜியின் குடும்பம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்ததாக தெரிகிறது.
அதை உணர்ந்த பல திரை நட்சத்திரங்கள், வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்துக்கு பின்னர் உதவுவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது, 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது குடும்பம் வறுமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கஷ்டம் இல்லை.. நன்றாக உள்ளதாக அவரது மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அக்கம்பக்கத்தினர் மிகவும் கஷ்டத்தில் உள்ளதை கண்கூடாக பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமது நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞனின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது என்பதை கேட்கும் பலரும் சற்றே கலங்கி போய் தான் உள்ளனர்.