த்ரிஷாவுக்கு ஒண்ணு… எனக்கு ஒண்ணா..? சீமான் பற்றி புது வீடியோ
சென்னை; சீமான் பற்றிய புது வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிரடி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது நடிகை விஜயலட்சுமி.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எனது கணவர். நாங்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தினோம், கணவன் மனைவி போல் வாழ்ந்தோம் என்று அரசியல் களத்திலும் மக்கள் களத்திலும் பரபரப்பை கிளப்பியவர் நடிகை விஜயலட்சுமி.
சீமான் பற்றியும், அவருடனான வாழ்க்கை பற்றியும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டவர். தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டவர். சீமான் மீது வழக்கும் தொடுத்தவர். பின்னர் சமரச பேச்சுவார்த்தையில் அனைத்தும் சுமூகமாக பெங்களூருக்கு அண்மையில் புறப்பட்டு சென்றார்.
அண்மைக்காலமாக அவர் பற்றிய எந்த செய்திகளும் இல்லாத நிலையில் த்ரிஷா, மன்சூர் அலிகான் பஞ்சாயத்தை முன்வைத்து தற்போது புது வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார். அதில் தாம் பாதிக்கப்பட்ட போது வராத பலரும் இப்போது த்ரிஷா, மன்சூர் அலிகான் விவகாரம் என்ற போது வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன்?
த்ரிஷாவுக்கு ஒண்ணு என்றால் சீமான் உள்ளிட்ட பலரும் வருகிறீர்கள்? சீமான் என்னிடம் என்ன பேசியிருந்தார் என வீடியோவில் போட்டு கொளுத்தி இருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவை கீழே காணலாம்;