தமிழக சட்டசபை தேர்தலில் கால் வைக்கும் ஓவைசி…! யாருடன் கூட்டணி யாருங்க..?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமமுகவுடன் அசாதுதீன் ஓவைசி கட்சியானது கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அமமுக வெளியிட்ட அறிவிப்பின் வருமாறு: வரக்கூடிய தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் (AIMIM) கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அமமுக தலைமையிலான கூட்டணியில் மஜ்லிஸ் கட்சிக்கு, திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒப்பந்தத்தில், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், மஜ்லிஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளா் முகமது ரஹமதுல்லா தாயப், தலைவா் டி.எஸ்.வக்கீல் அஹமது ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனா்.