Sunday, May 04 12:06 pm

Breaking News

Trending News :

no image

லீக் ஆனதா பாமகவின் தொகுதி பட்டியல்..? 23 தொகுதிகளின் முழு விவரம் இதோ…!


சென்னை: பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் என்று ஒரு பட்டியல் லீக்காகி அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது.

எந்த கூட்டணியில் இருந்தாலும் முதல் கட்சியாக தொகுதிகளை அறுவடை செய்வதில் பாமகவுக்கு நிகர், அந்த கட்சியே தான் என்று கூறலாம். கடந்த தேர்தல் போலவே இம்முறையும் அதிமுக கூட்டணியில் தொடரும் அக்கட்சி முதல் கட்சியாக 23 தொகுதிகளை பெற்று, அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கி இருக்கிறது.

இந் நிலையில் அந்த 23 தொகுதிகள் எவை என்பது பற்றி அனைத்து தரப்பிலும் பெருத்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் இணையத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகள் என்று ஒரு பட்டியல் ஜாலி உலாவாக வந்து கொண்டிருக்கிறது. அந்த பட்டியலில் உள்ள தொகுதிகளில் தான் பாமக போட்டியிடுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதோ அந்த தொகுதி பட்டியல்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. திருத்தணி
  3. எழும்பூர்
  4. செங்கல்பட்டு
  5. திருப்போரூர்
  6. சோளிங்கர்
  7. ஆற்காடு
  8. ஓசூர்
  9. பாப்பிரெட்டிப்பட்டி
  10. பென்னாகரம்
  11. ஆரணி
  12. கலசப்பாக்கம்
  13. அணைக்கட்டு
  14. திண்டிவனம்
  15. விக்கிரவாண்டி
  16. சங்கராபுரம்
  17. மேட்டூர்
  18. வீரபாண்டி
  19. குன்னம்
  20. ஜெயங்கொண்டம்
  21. பண்ருட்டி
  22. நெய்வேலி
  23. காட்டுமன்னார்கோயில்

Most Popular