Sunday, May 04 01:04 pm

Breaking News

Trending News :

no image

நடிகர் கவுண்டமணி மகளா இது….? இணையத்தில் வைரலான போட்டோ


சென்னை: நடிகர் கவுண்டமணியின் மகள் போட்டோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமா என்றால் கவுண்டமணி என்னும் காலம் இருந்தது. அவர் இல்லாவிட்டால் படம் தயாரிக்காமல் இருந்த தயாரிப்பாளர்கள் இருந்த காலக்கட்டம்.

கிட்டத்தட்ட கதாநாயகர்களுக்கு சமமாக படங்களில் நடித்து அசத்தியவர். அவரின் காமெடி, பஞ்ச் வசனங்களுக்கு இன்னமும் ரசிர்கள் இருக்கின்றனர். அவரும் செந்திலும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றி படங்களாகி இருக்கின்றன.

பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு தமது குடும்பத்தை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவார்கள். ஆனால் அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவராக இருப்பவர் கவுண்டமணி. குடும்பம் பற்றி ஊடக வெளிச்சம் படாமல் அவர் பார்த்துக் கொண்டவர்.

கவுண்டமணிக்கு சாந்தி என்பவருடன் கல்யாணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவரது பெயர் சுமித்ரா. மற்றொரு மகள் பெயர் செல்வி. கவுண்டமணியின் மகள் சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.

அவரது போட்டோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. பொதுவாக குடும்பத்தினர் பத்தி பெரிதாக அறிமுகம் செய்து கொள்ள மாட்டார். ஆகையால் மகளின் போட்டோவை இணையத்தில் அனைவரும் பார்த்து வருகின்றனர்.

Most Popular