நம்ப முடியலையே…? விழுகிறதா அமமுக முக்கிய விக்கெட்…? ஷாக்கில் டிடிவி…!
சென்னை: அமமுகவில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிவுகள் பல கட்சிகளை பெரும் சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கின்றன. தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகளை கூறலாம். திமுக தனி பெரும்பான்மையுடன் அரியணை ஏறிவிட அதிமுகவோ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுவிட்டு அரசியல் செய்து வருகிறது.
அதே நேரத்தில் மாற்று அரசியல் கட்சிகளில் இருந்து முக்கிய நபர்கள் பலரும் திமுகவை நோக்கி நகர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அண்மையில், டிடிவி தினகரனுக்காக எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை மாரியப்பன் கென்னடி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் திமுகவில் ஜாயிண்ட் ஆகிவிட்டனர்.
இவர்களை தொடர்ந்து மேலும் பலரை திமுக குறிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறராம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அமமுகவில் இருந்து பல முக்கிய தலைகள் விரைவில் திமுகவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்க வைத்துள்ளன.
அதில் முக்கியமாக அமமுக துணை பொது செயலாளரும், டிடிவி தினகரனுக்கு நெருக்கமானவருமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பன் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அவரை திமுகவில் சேர்ப்பதற்காக ஜரூர் பணிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முகாம் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. திமுக முகாமிலும், அதிமுக, அமமுக முக்கிய தலைகளை இணைக்கும் முயற்சிகளுக்கு பக்கபலமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் படாரென்று திமுக அல்லது அதிமுக பக்கம் தாவுவது கண்டு டிடிவி தினகரன் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு பின்னர் அவுட் ஆப் கவரேஜ் ஆக டிடிவி இருக்கிறார், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூட அணுக முடியவில்லை என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.
ஆனால் திமுகவில் இணைவதாக கூறப்படும் தகவல்களை பழனியப்பன் தரப்பு முற்றிலுமாக மறுத்து இருக்கிறது. இது குறித்து அவரது வட்டாரம் கூறிய தகவல் வேறுமாதிரியாக உள்ளது. பழனியப்பன் அரசியலில் மிகவும் சீனியர். அவர் செந்தில் பாலாஜி மூலமாக திமுகவில் இணைகிறாரா? அதெல்லாம் இல்லை, இப்போது மவுனமாக அவர் யோசித்து வருகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அரசியலில் அமைதி என்றால் அதற்கு ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன… இவரின் மவுனம் என்ன சொல்கிறது என்று தெரியவில்லை…!