செம பசி…! ஆன்லைனில் சாப்பாடு.. பிரிச்சு பார்த்தா..? அதிர்ந்த பிரபல நடிகை
பிரபல நடிகை ஆன்லைனில் ஆர்டர் பண்ணிய சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு ஷாக்காகி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் இவர் போட்டுள்ள ஒரு போட்டோ மின்னலாக வைரலாகி இருக்கிறது.
விஷயம் இது தான்… நிவேதா பெத்துராஜூக்கு திடீரென ரொம்ப பசி எடுத்துள்ளது. ஏதாவது செய்யலாமா? என்று யோசித்த அவருக்கு வழக்கம் போல ஆன்லைனில் சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணலாம் என்று தோன்றவே அவ்வாறு ஆர்டர் பண்ணி இருக்கிறார்.
பிரபல உணவகம் ஒன்றில் தமக்கு பிடித்த பிரைடு ரைஸ் சாப்பாட்டை ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு பெருங்குடியில் உள்ள அந்த பிரபல உணவகம் ஒன்றில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட உணவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வீட்டுக்கு வந்த உணவை ஆசையாய் சாப்பிடலாம் என்று பிரித்து உள்ளார் நிவேதா பெத்துராஜ். ஆனால் அந்த உணவில் கரப்பான் பூச்சி இருக்க செமத்தியாக அதிர்ந்து போயிருக்கிறார். கடுப்பான அவர் அதை அப்படியே போட்டோ எடுத்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இது முதல்முறையல்ல.. பல முறை இந்த உணவகத்தில் இப்படி பூச்சி இருக்கும் சாப்பாட்டை அனுப்பி இருப்பதாகவும், அந்த ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார். அவரது போட்டோவை கண்ட பலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு கரப்பான் பூச்சியை சாப்பாட்டுடன் சேர்த்து பார்சல் பண்ணிய ஓட்டல் எதுவாக இருக்கும் என்று ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றனர். எதற்காக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய வேண்டும், பேசாமல் வீட்டில் சமைத்து சாப்பிடலாமே என்றும் அட்வைஸ் செய்துள்ளனர்.