என்னது….? ஆதார் கார்டு… இதெல்லாம் தேவையே இல்லை…!
டெல்லி: ஆதார் கார்டு விதிமுகறைகளில் முக்கிய மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது ஆதார் கார்டு. எந்த அரசு தொடர்பான பணிகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம். அரசு நல திட்டங்கள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
சிறு குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகும். ஆனால் அவர்களுக்கான ஆதார் கார்டு பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அனுபவப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பால் ஆதார் கார்டு தரப்படுகிறது. இந்த அட்டையை அவர்களுக்கு பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம். ஆனால் இப்போது அதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதாவது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் பால் ஆதார் கார்டு வாங்கலாம். பிறப்பு சான்றிதழ் வரும் வரை எந்த பெற்றோரும் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
ஹாஸ்பிட்டலில் இருந்து தரும் டிஸ்சார்ஜ் ஸ்லிப், தந்தை அல்லது தாய் ஆதார் அட்டை பயன்படுத்தி இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் விவரம் வேண்டுவோர் https://uidai.gov.in/ என்ற இணையதளத்தினுள் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.